Homeசெய்திகள்சினிமாஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அஜித்தின் 'குட் பேட் அக்லி'!

ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

-

- Advertisement -

குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அஜித்தின் 'குட் பேட் அக்லி'!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகியிருந்த இந்த படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் ஜனவரி மாதத்தின் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அஜித்தின் 'குட் பேட் அக்லி'!மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே இப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்ததால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவல் வெளியாகி வந்தது. அதன்படி இப்படம் 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ