Homeசெய்திகள்சினிமாதீபாவளி ரேஸில் இணைகிறதா அஜித்தின் 'விடாமுயற்சி'?

தீபாவளி ரேஸில் இணைகிறதா அஜித்தின் ‘விடாமுயற்சி’?

-

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.தீபாவளி ரேஸில் இணைகிறதா அஜித்தின் 'விடாமுயற்சி'? இதில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படம் சம்பந்தமான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி அதை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி அஜர்பைஜானில் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்ற முடிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் 50 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்ததாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விரைவில் அஜர்பைஜானில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அஜித், விடாமுயற்சி படம் தாமதமாகி வருவதால் டென்ஷனாக இருப்பதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. தீபாவளி ரேஸில் இணைகிறதா அஜித்தின் 'விடாமுயற்சி'?இது ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி மே மாதத்தில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி 2024 தீபாவளி தினத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் தீபாவளி பண்டிகையை குறி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ