spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமணத்துக்கு முன்பே அமலாபால் கர்ப்பமா? புதிய சர்ச்சை...

திருமணத்துக்கு முன்பே அமலாபால் கர்ப்பமா? புதிய சர்ச்சை…

-

- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை அமலா பால். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், ‘நீலதாமரா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் களமிறங்கினார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இதில் நடிகர் ஹரிஸ் கல்யாணும் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் மைனா. பிரபு சாலமன் இப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அமலாபாலுக்கு தமிழில் புதிய பாதையை போட்டுத் தந்தது.

மைனா படத்தை அடுத்து அமலாபாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தெய்வ திருமகள், வேட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய், தனுஷ், அதர்வா, ஜெயம்ரவி, சித்தார்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் அண்மையில் தனது நீண்ட நாள் காதலன் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 2 மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார். தற்போது அவர் திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால்தான் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அமலா பால் முன்னதாக திருமணத்தின்போது பதிவிட்ட புகைப்படங்களில் அவரது வயிற்றை குறிப்பிட்டு இதனை தெரிவித்துள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ