Homeசெய்திகள்சினிமாவேட்டையன் அறிமுக பாடலில் அனிருத்... பிரம்மாண்டமாக படமாக்க திட்டம்....

வேட்டையன் அறிமுக பாடலில் அனிருத்… பிரம்மாண்டமாக படமாக்க திட்டம்….

-

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் எனும் புதிய படத்தை ஞானவேல் இயக்கி வருகிறார். இதில், ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் இன்ட்ரோ பாடல் இல்லாமல் இருப்பது, ரஜினி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அப்படியே பாடல் இருந்தாலும், அது மாஸாக கொண்டாடும் வகையில் இல்லை என்பதே வருத்தம்.

இதனால் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் அறிமுக பாடலை மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு வரும் 25-ம் தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளதாம். இந்த பாடலில் ரஜினியுடன் சேர்ந்து பல துணை நடிகர்கள் நடனமாட உள்ளனர். தினேஷ் மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

முத்து, அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களில் அமைந்திருந்த இன்ட்ரோ பாடல்களை போல, வேட்டையன் பட பாடலையும் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம், இன்ட்ரோ பாடலில் இசை அமைப்பாளர் அனிருத்தும் நடனமாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ