- Advertisement -
நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நயன்தாரா. சினிமா மட்டுமன்றி தொழில்துறை, குடும்பம், குழந்தைகள் என அனைத்திலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிக்கும் பட்சத்தில், மற்றொரு பக்கம் பல தொழில்களில் அவரும், அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி நயன்தாரா மற்றும ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வௌியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றன.


இதனிடையே, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நயன்தாரா, ஜெய், சத்யராஜ் இவர்களின் கூட்டணி ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. மேலும் அன்னபூரணி திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்து உள்ளனர்.



