காஞ்சனா 4 படத்தில் மற்றுமொரு நடிகை ஒருவர் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது கால பைரவா, பென்ஸ், ஹண்டர் ஆகிய பல படங்களை கைவசம் இருக்கிறார். இதற்கிடையில் இவர் முனி,காஞ்சனா , காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியான இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து காஞ்சனா 4 எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதன்படி ஏற்கனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இப்படம் 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் அவர் பேயாக நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.