Homeசெய்திகள்சினிமா25வது நாளாக தியேட்டரில் வெற்றி நடைபோடும் அரண்மனை 4!

25வது நாளாக தியேட்டரில் வெற்றி நடைபோடும் அரண்மனை 4!

-

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1,2,3 ஆகிய மூன்று பாகங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 25வது நாளாக தியேட்டரில் வெற்றி நடைபோடும் அரண்மனை 4!இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் சுந்தர். சிக்கு தங்கையாக தமன்னா நடிக்க, தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாடல் ஒன்றுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் 2024 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்த முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 25வது நாளாக தியேட்டரில் வெற்றி நடைபோடும் அரண்மனை 4!ஏனென்றால் சமீப காலமாக பல மலையாள திரைப்படங்கள் அசால்டாக நூறு கோடியை தட்டி தூக்கி சென்ற நிலையில், அரண்மனை 4 திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் திரைப்படபடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் கோடை விடுமுறை என்பதால் ரசிகர்கள் குடும்பத்துடன் அரண்மனை 4 திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதன்படி தற்போது இந்த படம் 25 நாட்களையும் நெருங்கி உள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ