Homeசெய்திகள்சினிமாசங்கர் இயக்கும் 'இந்தியன் 2'.... இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’…. இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

-

இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பெரிய அளவில் பிரபலமானது. சங்கர் இயக்கும் 'இந்தியன் 2'.... இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சங்கர். இதில் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல் ஊழலுக்கு எதிரான கதை களத்தில் தான் இந்தியன் 2 திரைப்படமும் உருவாகியுள்ளது. இந்த படமானது 2024 ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா 2024 ஜூன் 1ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் இந்தியன் 2 திரைப்படத்தின் பாரா எனும் பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.சங்கர் இயக்கும் 'இந்தியன் 2'.... இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு! இந்நிலையில் இதன் இரண்டாவது பாடல் வருகின்ற மே 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பாடலானது சித்தார்த் மற்றும் ராகுல் பிரீத் சிங் ஆகிய இருவருக்குமான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ