Homeசெய்திகள்சினிமாசைக்கோவாக மாறிய அர்ஜுன் தாஸ்...... திரில்லிங்கான 'அநீதி' பட டிரைலர் வெளியானது!

சைக்கோவாக மாறிய அர்ஜுன் தாஸ்…… திரில்லிங்கான ‘அநீதி’ பட டிரைலர் வெளியானது!

-

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அநீதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார்.
அந்த வகையில் இவர் கதாநாயகனாக அநீதி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், அரவான், உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியுள்ளார். படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி, காளி வெங்கட், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை வசந்த பாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனமும் இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள அநீதி திரைப்படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் அநீதி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் அர்ஜுன் தாஸ் எவ்வளவு தான் நேர்மையாக இருந்து வேலை செய்தாலும் இந்த சமூகம் அவரை அவமானப்படுத்துகிறது. அதனால் ஒரு கட்டத்தில் அவர் சைக்கோ கொலையாளியாக மாறிவிடுகிறார். இயக்குனர் வசந்தபாலன் இதுவரை மென்மையான படங்களை மட்டுமே இயக்கி இருந்த நிலையில், தற்போது அநீதி என்ற திரில்லர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் இதுவரை வில்லனாக பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் துசாரா விஜயனுக்கு காதலனாகவும் நடித்துள்ளார். மேலும் அவரின் கர்ஜிக்கும் குரலுக்கு ஏற்றார் போல் ஒரு சைக்கோ ஹீரோவாகவும் படத்தில் நடித்துள்ளார். அதனால் தற்போது வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ