spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்'.... இன்று வெளியாகும் முதல் பாடல்!

அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’…. இன்று வெளியாகும் முதல் பாடல்!

-

- Advertisement -

அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக இருக்கிறது.அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்'.... இன்று வெளியாகும் முதல் பாடல்!

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் ரெட்ட தல எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் மற்றும் சாம் .சி.எஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். இந்த படத்தில் அருண் விஜய் தவிர ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் இன்று டிசம்பர் 21 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ