Homeசெய்திகள்சினிமாகாதில் ரத்தம் வருகிறது.... 'விடுதலை 2' குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

காதில் ரத்தம் வருகிறது…. ‘விடுதலை 2’ குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

-

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று (டிசம்பர் 20) உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் விடுதலை 2. காதில் ரத்தம் வருகிறது.... 'விடுதலை 2' குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான விடுதலை முதல் பாகத்தில் கதையானது சூரியை சுற்றி நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை சுற்றி நகர்கிறது. அதன்படி கொடுக்கப்பட்ட மக்களுக்காக விஜய் சேதுபதி எப்படி போராளியாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இளையராஜாவின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “விடுதலை பாகம் 1 ஒரு மறக்க முடியாத படம். அதற்கு அந்த படத்தின் கதையும் திரைக்கதையும் தான் காரணம். படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் நம் மனதில் மறக்காமல் இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் தரமான கதாபாத்திரங்களை எழுதி இருப்பார் வெற்றிமாறன். காதில் ரத்தம் வருகிறது.... 'விடுதலை 2' குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!அதே கதாபாத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் வந்தாலும் மனதில் நிற்கவில்லை. நடிகர் சூரி கூட பத்தோட 11ஆக தான் வருகிறார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வலுவாக இல்லை. காதில் ரத்தம் வரும் அளவிற்கு கருத்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். விஜய் சேதுபதி போராளியாக எப்படி மாறுகிறார் என்பதை விளக்க 50 காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு நல்ல திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்றால், படத்திலிருந்து ஒரு காட்சியை நீக்கிவிட்டாலும், படம் முழுக்க அதன் ஜம்ப் தெரிய வேண்டும். அது தெரியவில்லை என்றால் அது தேவையில்லாத காட்சி என்று அர்த்தம். அதுபோன்று தேவையில்லாத காட்சிகள் இந்த படத்தில் நிறையவே இருக்கிறது. காதில் ரத்தம் வருகிறது.... 'விடுதலை 2' குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!தேவையில்லாத கதாபாத்திரங்களும் இருக்கிறது. குறிப்பாக மஞ்சுவாரியரின் கதாபாத்திரம் இந்த படத்திற்கு தேவையே இல்லை. விடுதலை முதல் பாகத்தில் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காட்சியுடன் படம் தொடங்கும். ஆனால் இந்த படத்தில் முதல் காட்சியை ஒரு அபத்தமான காட்சியாக இருக்கிறது. இந்த பாகத்தில் முதல் பாதி ஓகே தான். மேலும் கென் கருணாஸ் வரும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. வெற்றிமாறன் படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கும் ஆனால் மோசமான படம் என்றால், அது இந்த விடுதலை 2 படம் தான் என்று எங்களுக்கு தோன்றியது. உங்களுக்கும் தோன்றும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ