spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலக அளவில் 100 கோடி வசூலை நெருங்கும் 'அயலான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உலக அளவில் 100 கோடி வசூலை நெருங்கும் ‘அயலான்’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

உலக அளவில் 100 கோடி வசூலை நெருங்கும் 'அயலான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் கலந்த பேண்டஸி படமாக உருவாகியிருந்தது. கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற VFX காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்று வருகிறது. வெளியான முதல் நான்கு நாட்களில் உலக அளவில் 50 கோடியை கடந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. உலக அளவில் 100 கோடி வசூலை நெருங்கும் 'அயலான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் கடந்த (ஜனவரி 23) நேற்று வரை அயலான் படமானது உலக அளவில் 75 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தெலுங்கில் இப்படம் வெளியாக இருப்பதால், அங்கும் நல்ல வரவேற்பு பெற்று நூறு கோடி வசூலை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பானுப்பிரியா, இஷா கோபிகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அயலான் 2 திரைப்படமும் விரைவில் உருவாக உள்ளது.

MUST READ