spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅயலான் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா... வந்தது புதிய அப்டேட்...

அயலான் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… வந்தது புதிய அப்டேட்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பல முகங்கள் இயக்குநர்களாக அறிமுகமாகினாலும், ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்கின்றன. வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஆர்.ரவிக்குமார். நேற்று இன்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். டைம் டிராவலை மையப்படுத்தி உருவான இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

 

we-r-hiring
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்தார் ஆர்.ரவிக்குமார். அவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் அயலான். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்தது. ஆனால், பட வெளியீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக அயலான் படஇயக்குநர் ஆர்.ரவிக்குமாருடன் புதிய படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இத்திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். இத்திரைப்படத்திற்கான கதை விவாத பணிகள் முடிந்ததும், மே மாதத்தில் படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ