spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபேபி ஜான் படப்பிடிப்பு தீவிரம்... வெளியீடு ஒத்திவைப்பு...

பேபி ஜான் படப்பிடிப்பு தீவிரம்… வெளியீடு ஒத்திவைப்பு…

-

- Advertisement -
வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் பேபி ஜான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

கோலிவுட் மட்டுமன்றி இந்திய திரையுலகில் முன்னணி இயக்குராக உச்சம் தொட்டிருப்பவர் இயக்குநர் அட்லீ. தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான, அட்லீ அடுத்து விஜய்யுடன் இணைந்து தெறிபடத்தை இயக்கினார். கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் வௌியான திரைப்படம் தெறி. படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன், ஐரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் போலீசாக நடித்திருப்பார். இத்திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

we-r-hiring
கடந்த ஆண்டு தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்று படப்பிடிப்பும் தொடங்கியது. இயக்குநர் அட்லீ இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை கீ படத்தை இயக்கிய காலிஸ் இயக்க உள்ளார். படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு பேபி ஜான் என்று தலைப்பு வைக்கப்பட்டு, படத்தின் முதல் தோற்ற வீடியோவும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் மே மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

MUST READ