Homeசெய்திகள்சினிமாபாலா இயக்கத்தில் நடிக்கும் மிஷ்கின்..... எந்த படத்தில் தெரியுமா?

பாலா இயக்கத்தில் நடிக்கும் மிஷ்கின்….. எந்த படத்தில் தெரியுமா?

-

இயக்குனர் பாலா தென்னிந்திய திரை உலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் நந்தா, சேது, நான் கடவுள், பரதேசி, தார தப்பட்ட உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர் தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா சில நாட்கள் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா படத்தை விட்டு வெளியேற அருண் விஜய் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன மேலும் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என்று தகவல்கள் பரவி வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் மிஸ்கின் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் மேலும் ஒரு சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ