spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்

ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்

-

- Advertisement -

ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்

பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோரின் நடிப்பில் ராமாயணத்தை தழுவி உருவாக்கப்பட்ட ஆதிபுரூஷ் திரைப்படம் ஜூன் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. டி சீரிஸ் நிறுவனம் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்டு வெளியான இப்படம், பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் சிறுபிள்ளைதனமாக இருப்பதாகவும், இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

we-r-hiring

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “ராமர், அனுமனை அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருக்கிறது. ஆதிபுருஷ் படத்தின் வசனம் உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இந்துமத உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்துக்கள், சனாதன தர்மத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரையிடலை நிறுத்தவும், OTT தளங்களில் திரையிடலை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ