Homeசெய்திகள்சினிமாஅக்டோபர் 2-ல் ஓடிடியில் வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – எந்த தளத்தில் தெரியுமா?

அக்டோபர் 2-ல் ஓடிடியில் வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – எந்த தளத்தில் தெரியுமா?

-

- Advertisement -

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

we-r-hiring

மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சங்கேத் பிரதாப், ரோஷன் ஷனவாஸ், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரீந்தா, மீனாட்சி ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் வெளியானது

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இந்த திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து ஓடி வந்தது.

படத்தின் மையக் கதாபாத்திரங்களாக நிவின் பாலி நடித்த ஜஸ்டின் மற்றும் மமிதா பைஜு நடித்த ஆஷ்லி ஆகியோர் உள்ளனர். ஆஷ்லியும் அவரது குடும்பத்தினரும் புதிய இடத்திற்கு குடிபெயர்ந்து வருவதால் ஜஸ்டினின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், இருவருக்கும் இடையே உருவாகும் காதலையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. குடும்ப உறவுகள், காதல் மற்றும் நகைச்சுவை ஆகிய அம்சங்களுடன் திரைப்படம் உருவாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதி

திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 2-ம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஜியோஹாட்ஸ்டார் மலையாளம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.

மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் பல மொழிகளில் பார்வையாளர்களை சென்றடையும் வகையில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

படக்குழு

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தை கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ளார். கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரண் ஜோசி இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள நிலையில், அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இதனால் திரையரங்குகளில் இப்படத்தை தவறவிட்ட நிவின் பாலி மற்றும் மமிதா பைஜுவின் ரசிகர்கள், அக்டோபர் 2 முதல் வீட்டிலிருந்தபடியே ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை பார்க்கலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பராகவும், சகோதரராகவும் இருப்பவர் – இயக்குனர் வெங்கட் பிரபு!

MUST READ