Homeசெய்திகள்சினிமாநடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பராகவும், சகோதரராகவும் இருப்பவர் - இயக்குனர் வெங்கட்...

நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பராகவும், சகோதரராகவும் இருப்பவர் – இயக்குனர் வெங்கட் பிரபு!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் கைவிடப்பட்ட திரைப்படம் தொடர்பாக கங்கை அமரன் எழுப்பிய சர்ச்சைக்கு இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்!

we-r-hiring

AGS தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படம் தொடக்கத்திலேயே கைவிடப்பட்டது. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையும் நடிகருமான கங்கை அமரன் சமீபத்திய தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், சிவகார்த்திகேயன் பெயரை குறிப்பிடாமல் அவரை குறை சொல்வது போல் பேசியிருந்தார். நடிகர் காலில் விழுந்து படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது குடும்பத்திற்கு அவமானம் இல்லையா என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் சமூக வலைதள பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“SK எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பராகவும் சகோதரராகவும் இருப்பவர்.

நிறைய யூகங்களும் சர்ச்சைகளும் தற்போது சுற்றி வருகின்றன. ஒரு தந்தையாக, தனது சொந்த மகன் நடிக்கும் படம் தாமதமாகும்போது ஏற்படும் விரக்தி இயல்பானதுதான். முழு விஷயமும் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்; அதற்காக அவரை நான் குறை சொல்ல முடியாது.

எனது பணியைப் பொறுத்தவரை நான் மிகவும் அமைதியான நபர். எனது தொழில்முறை விஷயங்களைப் பற்றி அவரிடம்கூட யாரிடமும் விரிவாகப் பேசுவதில்லை.

பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தைத் தொடங்க முடியவில்லை. அவ்வளவுதான். யார் மீதும் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை.

எதிர்காலத்தில் சரியான நேரம் வந்து, நல்ல கதை எனக்கு கிடைத்தால், SK உடன் மீண்டும் பணியாற்ற நான் மிகவும் விரும்புகிறேன்.

எனவே, இதையெல்லாம் இத்துடன் முடித்துக்கொள்வோம். நான் தற்போது எனது அடுத்த படத்தில் பிஸியாக இருக்கிறேன். எனது சகோதரர் சிவகார்த்திகேயனின் சேயோனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு!

MUST READ