Homeசெய்திகள்சினிமாசார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு!

சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு!

-

- Advertisement -

புதிய போஸ்டரில் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் குறிப்பிடாத நிலையில், நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான், வேட்டுவம் படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது?

we-r-hiring

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, துசாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாக உள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கப்பட்டதாக போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சென்னையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார் பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

ஆனால் தற்பொழுது பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக சார்பட்டா படத்திற்குப் பிறகு இயக்குனர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் மற்றும் விரைவில் திரைக்கு வர உள்ள வேட்டுவம் ஆகிய படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கூட இசையமைப்பாளர் யார் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை,எனவே இப்படத்தில் சந்தோஷ் நாராயணனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவாரா அல்லது மாற்று இசையமைப்பாளருடன் பணியாற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கு தனி அரசு OTT தளம்! விரைவில் நல்ல செய்தி – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

MUST READ