spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போகும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்?

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போகும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்?

-

- Advertisement -

திரைத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் பல தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அந்த வகையில் ரங்கஸ்தலம், புஷ்பா, குஷி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்துள்ளது. அடுத்ததாக வெளியாக உள்ள புஷ்பா 2, நடிகர் திலகம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறது. மேலும் டாப் நடிகர்களின் படங்களையும், பல பான் இந்தியா படங்களையும் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் பல படங்களையும் விநியோகமும் செய்கிறது.அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போகும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்?

இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படம் சம்பந்தமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (பிப்ரவரி 14 ) காலை 9.09 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போகும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்?

we-r-hiring

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அஜித்தின் 63வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தது. எனவே ரசிகர்கள் பலரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு, AK63 படத்தின் அறிவிப்பாக இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இருப்பினும் இந்த அறிவிப்பில் லிட்டில் சர்ப்ரைஸ் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் AK63 படத்தின் அறிவிப்பாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ