Homeசெய்திகள்சினிமாநாளை தொடங்கும் 'SK23' படப்பிடிப்பு...... சிவகார்த்திகேயனுக்கு ஜோடி அந்த நடிகை இல்லையா?

நாளை தொடங்கும் ‘SK23’ படப்பிடிப்பு…… சிவகார்த்திகேயனுக்கு ஜோடி அந்த நடிகை இல்லையா?

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நாளை தொடங்கும் 'SK23' படப்பிடிப்பு...... சிவகார்த்திகேயனுக்கு ஜோடி அந்த நடிகை இல்லையா?இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். SK23 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அதன்படி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மோகன்லால் மற்றும் வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சீதாராமம் பட நாயகி மிர்ணாள் தாகூர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்பட்டது.நாளை தொடங்கும் 'SK23' படப்பிடிப்பு...... சிவகார்த்திகேயனுக்கு ஜோடி அந்த நடிகை இல்லையா? இந்நிலையில் இதன் புதிய தகவல் என்னவென்றால் இதில் கதாநாயகியாக நடிக்க இருப்பது சப்த சாகரடாச்சே எல்லோ (கன்னட திரைப்படம்) என்ற படத்தில் நடித்த ருக்மணி வசந்த் தான் இதில் கதாநாயகியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் SK23 படப்பிடிப்பு மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நாளை (பிப்ரவரி 14) தொடங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகிறது.

ஏ ஆர் முருகதாஸ், சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு கமிட்டாகி இருப்பதால் விரைவில் SK23 படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாகவே SK23 படத்தின் படப்பிடிப்புகள் நாளை தொடங்கப்பட இருக்கிறது.

MUST READ