சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிக்கும் ‘சர்ஃபிரா‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். கோ.ரா. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இருப்பினும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஐந்து தேசிய விருதுகளை வென்றது.

இதன் இமாலய வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் அக்ஷய் குமார் உடன் இணைந்து ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இதில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார்.
Dream so Big, they call you Crazy!!#Sarfira releasing in cinemas on 12th July, 2024. https://t.co/hUgNo6fuaa pic.twitter.com/rOtlhZQSV6
— Suriya Sivakumar (@Suriya_offl) February 13, 2024
தற்போது இந்த படமானது 2024 ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சர்ஃபிரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.