spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை.... மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!

இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை…. மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!

-

- Advertisement -

இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை.... மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!இயக்குனர் மணிகண்டன், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். தொடக்க காலத்தில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இவர் பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்து முதல் படமான காக்கா முட்டை படத்திற்காக சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்னும் பிரிவில் தேசிய விருது வென்றார். அதைத் தொடர்ந்து குற்றமே தண்டனை,ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி புகழ்பெற்றார். கடந்தாண்டு இவர் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை.... மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!

இந்நிலையில் சமீபத்தில் மதுரை அருகில் உள்ள உசிலம்பட்டியில் உள்ள எழில் நகர் பகுதியில் உள்ள இயக்குனர் மணிகண்டன் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன்படி 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தேசிய விருதுகளையும் பதக்கங்களையும் திருடி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை.... மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!இந்நிலையில் அந்த கொள்ளையர்கள் வீட்டிற்கு வெளியில் ஒரு பையில் வெள்ளி பதக்கங்களையும், அத்துடன் ஒரு கடிதத்தையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்தக் கடிதத்தில் “ஐயா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதப்பட்டுள்ளது.

we-r-hiring

தற்போது அந்த கடிதத்தையும் பதக்கங்களையும் கைப்பற்றிய உசிலம்பட்டி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ