Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லர் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ரிலீஸ்

கேப்டன் மில்லர் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ரிலீஸ்

-

- Advertisement -
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்திலிருந்து மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் கேப்டன் மில்லர். பீரியட் கதைக்களத்தில் உருவாகும் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக உள்ளதாக அண்மையில் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்திருந்தார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். 8 மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனளே வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்திலிருந்து மூன்றாவது பாடல் வௌியாகி இருக்கிறது. சமூகவலைதளங்களில் இது டிரெண்டாகி வருகிறது. மேலும், இத்திரைப்படம் வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ