Homeசெய்திகள்சினிமாதென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதியுதவி…

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதியுதவி…

-

பொருளாதார பிரச்சனை காரணாக தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது. இதற்கான நிதியை கோலிவுட்டின் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், முன்னதாக நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார். மேலும், கமல்ஹாசனும் நிதியுதவி வழங்கி இருக்கிறார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நிதியுதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளை தொடர்வதற்காக சொந்தவருமானத்திலிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருக்கிறார். நெப்போலியனும் உதவித்தொகை வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நிதியுதவி வழங்கி இருக்கிறார். அதன்படி சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் கார்த்தியை சந்தித்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கி உள்ளார்.

MUST READ