கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியீடு!
நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். பீரியாடிக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன், அதிதி பாலன்,ஜான் கொக்கென், நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக வெளியான டீசர் கவனம் பெற்ற நிலையில் அதை தொடர்ந்து முதல் மூன்று பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
Captain Miller trailer https://t.co/ybtSCjn7sL pic.twitter.com/Ie69ylXAq5
— Dhanush (@dhanushkraja) January 6, 2024
இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை, கேப்டன் மில்லர் படத்திற்கு பெரிதும் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த ட்ரெய்லரில் தனுஷ் தாடியுடன் சில காட்சிகளிலும் கிளீன் ஷேவ் செய்து சில காட்சிகளிலும் காண்பிக்கப்படுகிறார். மேலும் போர்க்களங்களும் ஆக்ஷன் காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது. தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதே சமயம் இந்த கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


