spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' படப்பிடிப்பு.... ரிலீஸ் தேதி இதுதானா?

விரைவில் தொடங்கும் தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படப்பிடிப்பு…. ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விரைவில் தொடங்கும் தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' படப்பிடிப்பு.... ரிலீஸ் தேதி இதுதானா?

கடந்த 2013 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ராஞ்சனா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அத்ரங்கி ரே எனும் திரைப்படத்திலும் நடிகர் தனுஷ், ஆனந்த் எல் ராயுடன் கூட்டணி அமைத்திருந்தார். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறது. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு தேரே இஷ்க் மெய்ன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தொடங்கும் தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' படப்பிடிப்பு.... ரிலீஸ் தேதி இதுதானா?இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பல மாதங்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று (ஜனவரி 27) தேரே இஷ்க் மெய்ன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கலர் எல்லோ ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (ஜனவரி 28) வெளியாகும் என அறிவித்திருந்தது.

we-r-hiring

எனவே அந்த அறிவிப்புக்காக ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கிரித்தி சனோன் நடிக்கிறார் என படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் இப்படமானது 2025 நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவித்திருக்கிறது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ