Homeசெய்திகள்சினிமா‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!

‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!

-

- Advertisement -

வெஸ்டர்ன் காட்ஸ் பிக்சர்ஸ் எல்.எல்.பி’ என்ற பெயரில் புதிய பயணம் தொடக்கம்!‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டைரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி கவனத்தைப் பெற்ற இன்னாசி பாண்டியன், தற்போது தயாரிப்பாளராகத் தனது அடுத்தகட்ட திரைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

we-r-hiring

தயாரிப்பாளராக புதிய அவதாரம்
தனது வித்தியாசமான கதையமைப்பாலும் சுவாரசியமான திரைக்கதையாலும் சினிமா ரசிகர்களிடையே தனி முத்திரை பதித்த இயக்குநர் இன்னாசி பாண்டியன், தற்போது ‘வெஸ்டர்ன் காட்ஸ் பிக்சர்ஸ் எல்.எல்.பி’ (Western Ghats Pictures LLP) என்ற சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!

அடுத்தடுத்த படைப்புகளுக்குத் திட்டம்
திரைத்துறையில் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளது குறித்துப் பேசிய அவர், தரமான மற்றும் புதுமையான கதைக் களங்களைக் கொண்ட திரைப்படங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலேயே இத்தாயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இயக்குநராகத் முத்திரை பதித்த இன்னாசி பாண்டியன், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பதை அடுத்து திரையுலகச் சார்ந்த பிரபலங்களும், திரைப்பட ரசிகர்களும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இத்தாயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகவுள்ள முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் மெகா கூட்டணி: ஆக்ஷய் குமார் – சைஃப் அலிகான் நடித்த ‘ஹைவான்’ ட்ரெய்லர் வெளியீடு!

MUST READ