Homeசெய்திகள்சினிமாசைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கி இருந்த படம் தான் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. சில இடங்களில் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு கை கொடுக்கவில்லை எனவும் பலரும் தங்களை கருத்தை தெரிவித்து வந்தனர். ஆனால் மறுபுறம் சைரன் படம் மாஸ் காட்டி வருவதாகவும் தெரிவித்தனர். சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?இவ்வாறு கலவையான விமர்சனங்களை பெற்று வரும் சைரன் முதல் நாளில் 1.60 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் மூன்றாவது நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் சைரன் திரைப்படம் அதிக வசூலை பெற்றுத் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ