Homeசெய்திகள்சினிமாதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு...... 'தக் லைஃப்' படத்தில் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்கள்!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…… ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...... 'தக் லைஃப்' படத்தில் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்கள்!இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து திரிஷா, கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது தேர்தல் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிகர் ஜெயம் ரவி, ஆகியோர் கால் ஷீட் பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறியதாக தகவல் வெளியானது. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...... 'தக் லைஃப்' படத்தில் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்கள்!அதே சமயம் இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நடிகர் சிம்புவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாகவும் இவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...... 'தக் லைஃப்' படத்தில் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்கள்!மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ