நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கியிருந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார் மிஸ்கின். ஆனால் விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கப் போவதாக விஷால் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஷால் பல படங்களில் நடித்து வந்த நிலையில் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப் போவதாகவும் தனது இயக்குனராக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாக போகிறது என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். அதன்படி துப்பறிவாளன் 2 படமானது மே மாதத்தில் தொடங்கும் என்று தெரியவந்தது. இந்நிலையில் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் 2024 மே மாதம் 5ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து பிரசன்னா, கௌதமி, ரஹ்மான் உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -