Homeசெய்திகள்சினிமாவாத்தி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்..... டைட்டில் ரிலீஸ் அப்டேட்!

வாத்தி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்….. டைட்டில் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

துல்கர் சல்மான் தற்போது கிங் ஆப் கோத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தை தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் துல்கர் சல்மானின் புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி துல்கர் சல்மானின் 37 ஆவது பிறந்த நாளான நாளை நண்பகல் 1.44 மணி அளவில் படத்தின் தலைப்பை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ