- Advertisement -
யாரடி நீ மோகினி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரி ரிலீஸ் ஆகிறது.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷூக்கு, தொடக்கத்தில் கிடைத்தவை அனைத்தும் தோல்விகள், விமர்சனங்கள் மற்றும் அவமானங்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பில் வெளியான படங்கள் வெற்றிப் படங்களாக இருந்தாலும், தனுஷ் உருவகேலி செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல ஹிட்களை கொடுக்கத் தொடங்கிய தனுஷ், முன்னணி நடிகராக உருவெடுத்தார். தனுஷ் நடிப்பில் காதல், கமர்ஷியல் மற்றும் காமெடி படங்கள் பல வந்துள்ளன.


அதில் முக்கியமான ஒரு திரைப்படம் என்றால் அது யாரடி நீ மோகினி. தெலுங்கில் த்ரிஷா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆடவரி மாதலுக்கு அர்த்தலே வெருளே என்ற படத்தின் ரீமேக் தான் யாரடி நீ மோகினி படமாகும். இத்திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார். படத்தில் தனுஷூடன், நயன்தாரா, ரகுவரன், கருணாஸ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இத்திரைப்படம் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் திரைக்கதை மட்டுமன்றி படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துபாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, டி இமான் ஆகியோர் இசை அமைத்திருந்தனர். காதல், காமெடி என செண்டிமெண்ட்டாக இப்படம் வெற்றி பெற்றது.



