Homeசெய்திகள்சினிமாஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை!

ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை!

-

- Advertisement -

ஷாருக்கான் மகள் சுஹானா கானுக்கு பிரபல நடிகை அம்மாவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பதான், ஜவான், டங்கி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஷாருக்கான் கிங் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்பதான் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள சித்தார்த் ஆனந்த் மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் தீபிகா படுகோன் அல்லது கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை!தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் சுஹானா கானின் அம்மாவாக நடிக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ