கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடல் வெளியாகியுள்ளது.
ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ராம் சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. கொரோனா போன்ற காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தை 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஜரகண்டி எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலை நடிகர் ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக பட குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


