Homeசெய்திகள்சினிமாகோஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

கோஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

-

- Advertisement -
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கோஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஶ்ரீனவாஸ் இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமார் உடன் இணைந்து ஜெயராம், அனுபவம் கேர், பிரசாந்த் நாராயணன் அர்ச்சனா ஜோயிஸ் சத்திய பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ட்ரைலரில் ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்பட்டது. மேலும் இதில் டி ஏஜிங் தொழில் நுட்பத்தின் மூலம் இளம் வயது சிவராஜ்குமார் காண்பிக்கப்படுகிறார். சந்தேஷ் ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கோஸ்ட் திரைப்படம் வரும் 17-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ