Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படம் இணையத்தில் லீக்.... அதிர்ச்சியில் படக்குழு!

‘குட் பேட் அக்லி’ படம் இணையத்தில் லீக்…. அதிர்ச்சியில் படக்குழு!

-

- Advertisement -

குட் பேட் அக்லி திரைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.'குட் பேட் அக்லி' படம் இணையத்தில் லீக்.... அதிர்ச்சியில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித்தின் 63வது படமான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரனும் மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு இப்படத்தை இயக்குவதாலும், அஜித்தின் தீவிர ரசிகனான இவர் அஜித்தை எப்படி காட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள இந்த படத்தினை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதாவது லாஜிக்கை எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்த்தால் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களுக்கு தரமான தீனி போட்டுள்ளார். 'குட் பேட் அக்லி' படம் இணையத்தில் லீக்.... அதிர்ச்சியில் படக்குழு!மேலும் மாஸ், ஆக்சன் என அனைத்திலும் கலக்கி இருக்கிறார் அஜித். அடுத்தது அர்ஜுன் தாஸ் தன்னுடைய வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க அஜித் ரெபரன்ஸ், பல சர்ப்ரைஸ்களை வைத்து ஃபேன் பாய் சம்பவம் செய்திருக்கிறார். இவ்வாறு இப்படம் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த தகவல் படக்குழுவினரை அதிர்ச்சியில் அழுத்தியுள்ளது.

MUST READ