Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் பேராதரவு பெற்ற குட் நைட் திரைப்படம்… ஓடிடியில் ரிலீஸ் எப்போது தெரியுமா?

ரசிகர்களின் பேராதரவு பெற்ற குட் நைட் திரைப்படம்… ஓடிடியில் ரிலீஸ் எப்போது தெரியுமா?

-

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள’குட் நைட்‘ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மணிகண்டன் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமானவர். இந்தப் படத்தில் ராசாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது ‘குட் நைட்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன், ரேச்சல் ஜெபேக்கா உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயகர் சந்திரசேகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படம் கடந்த மே 12ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் மணிகண்டனுக்கு குறட்டை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த குறட்டை பிரச்சனையால் நண்பர்கள், குடும்ப உறவினர்கள் அனைவரும் இவரை அவமானப்படுத்துகிறார்கள். இறுதியில் மணிகண்டனின் குறட்டை பிரச்சனை தீர்ந்ததா? என்பதே குட் நைட் படத்தின் கதையாகும்.

எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வெளியிடப்பட்ட இந்த படம் ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ