Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்டமாக நடைபெறும் 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்..... சிறப்பு விருந்தினர் யார்?

பிரம்மாண்டமாக நடைபெறும் ‘இந்தியன் 2’ ஆடியோ லான்ச்….. சிறப்பு விருந்தினர் யார்?

-

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பிரம்மாண்டமாக நடைபெறும் 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்..... சிறப்பு விருந்தினர் யார்?அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறும் 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்..... சிறப்பு விருந்தினர் யார்?மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாக்கத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படமும் 2024 ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் வருகின்ற மே 16ஆம் தேதி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆகவே இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக யார் வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினி இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருவார் என்று ஒரு தரப்பில் சொல்லப்பட்டாலும் லால் சலாம் படத்திற்கு பிறகு லைக்கா நிறுவனத்திற்கும் ரஜினிக்கும் இடையில் மனஸ்தாபம் இருக்கும் காரணத்தால் ரஜினி இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட மாட்டார் என்று சொல்லப்படுகிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்..... சிறப்பு விருந்தினர் யார்?மேலும் இயக்குனர் சங்கர், சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோரை இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க திட்டமிட்டு வருவதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் சிறப்பு விருந்தினராக யார் வரப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ