Homeசெய்திகள்சினிமாஐந்து நாட்களில் முடிவடையும் அமரன் படப்பிடிப்பு... விரைவில் வௌியாகும் ரிலீஸ் தேதி...

ஐந்து நாட்களில் முடிவடையும் அமரன் படப்பிடிப்பு… விரைவில் வௌியாகும் ரிலீஸ் தேதி…

-

- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்களில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெரினா படத்தில் தொடங்கிய சிவகார்த்திகேயனின் சினிமா பயணம், இன்று வரை வெற்றிப்பயணமாக சென்று கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினிமுருகன் என அடுத்தடுத்து காமெடி கலாட்டா படங்களில் நடித்து வந்த சிவகார்த்தி, காக்கி சட்டை படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாக உருவெடுத்தார். இதைத்தொடர்ந்து ரெமோ, டாக்டர் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்தியேன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாவீரன் மற்றும் அயலான்.

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டு அண்மையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்ககு இசை அமைக்கிறார்.

இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 5 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ