spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்... தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு...

யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்… தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு…

-

- Advertisement -
தனது குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளத்தில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.

நடிகர்களைப் போலவே பல யூடியூபர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். அப்படி ஒருவர் தான் இர்பான். 3.53 மில்லியன் ரசிகர்கள் இவரது யூடியூப் சேனலை பின் தொடர்கின்றார்கள். உணவுகள் குறித்த இவரது வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பல வகையான மனிதர்களுடன் உரையாடி பல வகையான உணவுகளை பற்றி இவர் வெளியிடும் வீடியோவுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு

we-r-hiring
இந்தியாவில் மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் இருக்கும் உணவு வகைகளை பற்றியும் வீடியோ வெளியிட்டு வந்தார் .இதன் மூலம் இவர் பிரபலமான ஆனார். உணவுகள் பற்றிய விமர்சனங்களை தொடர்ந்து, வெளிநாடுகளுக்கும் சென்று முதலை வேட்டை, விமானம் ஓட்டுதல், துப்பாக்கிச் சூடு போன்ற சாகச வீடியோக்களையும் பதிவிட்டார். அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியன் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரின் பேட்டி எடுத்து தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளத்தில் அறிவித்த இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்து, குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக சமூக வலைதளத்தில் அறிவித்ததால், இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

MUST READ