spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபேரனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய ரஜினிகாந்த்

பேரனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய ரஜினிகாந்த்

-

- Advertisement -
தனது பேரனின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடிய ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கூட்டணியில் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

we-r-hiring
அதைத் தொடர்ந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பாகவே செய்திகள் வெளியாகி வந்தது. ரஜினியின் இரண்டாவது மகளும், இயக்குநருமான சௌந்தர்யாவிற்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் கிருஷ்ணாவின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி இருக்கிறார். கிரிக்கெட் மைதானம் ஒன்றில் நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் பேரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தற்போது வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

MUST READ