நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்… நடிகர் சிவகார்த்திகேயன்…
- Advertisement -
நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து ஹீரோவாக கலக்கி வருகிறார் நடிகர் சூரி. பல ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த அவரை, இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரையில் ஜொலிக்க வைத்தார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். இவ்வளவு நாட்கள் தன் நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி, தற்போது தன் நடிப்பால் அதே ரசிகர்களை கைதட்ட வைக்கிறார்.

அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை கூலாங்கள் படத்தை இயக்கி வினோத் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் திரைப்படம் தான் கருடன். இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூரி, வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம், காமெடி கூறுபவர்களுக்கு தான் சீரியஸான கதாபாத்திரங்களும் நன்றாக நடிக்க வரும் என்று தெரிவித்தார். மேலும், கதையின் நாயகனாக நடிங்க என சூரி அண்ணாவிடம் நான் தான் முதலில் கூறினேன் என்றும், அப்போது அவர் வேண்டாம் தம்பி என்று மறுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.