Homeசெய்திகள்சினிமா'கருடன்' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி!

‘கருடன்’ இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி!

-

நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். 'கருடன்' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி!இந்த படம் சூரிக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. எனவே அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. அந்த வகையில் ஏற்கனவே கொட்டுக்காளி எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கருடன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 'கருடன்' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி!இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது. 'கருடன்' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி!இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் விஜய் சேதுபதியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் விடுதலை இரண்டாம் பாகத்திலும் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ