Homeசெய்திகள்சினிமாபட வெற்றிக்காக கோயில் கோயிலாக செல்லும் ஜான்வி கபூர்

பட வெற்றிக்காக கோயில் கோயிலாக செல்லும் ஜான்வி கபூர்

-

மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி பட வெற்றிக்காக நடிகை ஜான்வி கபூர் கோயில் கோயிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஆவார். இவர் பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இவர் நடித்து வருகிறார். பாலிவுட் மட்டுமன்றி தற்போது தென்னிந்தியா பக்கமும் இவரது ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் இவர் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகிறார்.மேலும், அடுத்து ராம்சரண் நடிக்கும் புதிய படத்திலும் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஜான்வி கபூர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி. மேலும், இப்படத்தை ஷரன் ஷர்மா இயக்க, ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தை ஷரன் ஷர்மா இயக்க, ராஜ்குமார் ராவ் நாயகனாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் மே மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதில் மாஹி என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை ஜீ நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை ஜான்வி கபூர் உள்பட படக்குழுவினர் வாரணாசியில் உள்ள கோயில்களில், பட வெற்றிக்காக சாமி தரிசனம் செய்துள்ளனர்.

MUST READ