ஹரிஷ் கல்யாண் தென்னிந்திய திரை உலகில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் எல் ஜி எம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா , இவானா, யோகி பாபு, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் டீசல், பார்க்கிங், நூறு கோடி வானவில், உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
அதேசமயம் ஹரிஷ் கல்யாண், லப்பர் பந்து எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமிழரசன் பச்சை முத்து இயக்குகிறார்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா விஜய், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஜெய் பீம் படத்தில் இசை அமைத்த ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஜூன் 29ஆம் தேதி ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் லப்பர் பந்து திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் இன்று தொடங்கியுள்ளன என்று படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.