spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅயோத்தி ராமர் கோவில் விழா... நடிகை ஹேமமாலினி நடனம்!

அயோத்தி ராமர் கோவில் விழா… நடிகை ஹேமமாலினி நடனம்!

-

- Advertisement -
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவின்போது வரும் ஜனவரி 22-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி நடனம் ஆட உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 22-ம் தேதி குமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த கோயிலுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி கட்டுமானத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

we-r-hiring
விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள மாபெரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி பாலிவுட்டில், அலியா பட், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஹேமா மாலினி உள்பட பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளன. இதில் லட்சக்கணக்கில் பக்தர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், கோயில் நிகழ்ச்சியின்போது, பிரபல பாலிவுட் நடிகையும், பிஜேபி எம்பியுமான ஹேமமாலினி நடனமாடி சிறப்பிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ