spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா10 கோடி பார்வையாளர்களை கடந்தது ஜெயிலர் பாடல்

10 கோடி பார்வையாளர்களை கடந்தது ஜெயிலர் பாடல்

-

- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளின் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் 575 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற காவாலா உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன

இந்நிலையில், படத்தில் இடம் பெற்றிருந்த ஹக்கூம் என்ற பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ