Homeசெய்திகள்சினிமாஇறுகப்பற்று திரைப்படம் இணையத்தில் வெளியானது

இறுகப்பற்று திரைப்படம் இணையத்தில் வெளியானது

-

- Advertisement -

விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இதில் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விதாரத்துக்கு ஜோடியாக அபர்னதி நடித்துள்ளார். மேலும் ஶ்ரீ, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கோகுல் பினாய் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கான்செப்ட் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து திரைப்படமும் கடந்த 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மூன்று ஜோடிகளின் திருமண வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இறுகப்பற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸில் இத்திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

MUST READ