நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி 627 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதே சமயம் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் எனவும் அப்படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். விஜயின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சமூக வலைதளங்களில் தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற தகவல்கள் பரவலாக பரவி வந்தது. அதன்படி தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்பராஜ் அல்லது எச் வினோத் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்றைய முன் தினத்திலிருந்து அந்த லிஸ்டில் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்துள்ளார். அதன்படி இந்த மூவரில் யாரேனும் ஒருவர் தளபதி 69 படத்தை இயக்கப் போகிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கப் போகிறார் என்ற தகவல் உண்மை இல்லையாம். நடிகர் விஜயின் தரப்பில் இதனை வெறும் வதந்தி என்று கூறுகின்றனராம். அது மட்டும் இல்லாமல் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இதன் பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார். இதன் பிறகு விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்க வேண்டும் என்றால் நிச்சயம் இரண்டு வருடங்கள் ஆகிவிடும். அதற்குள் சட்டமன்றத் தேர்தலும் வந்துவிடும். எனவே தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பே இல்லை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


